கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் நேற்று முன் தினம் 21,750 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டதில் அதில் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.