சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா.. புதிதாக 28 பேருக்கு கொரோனா

உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் இதுவரை 95,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!