அமெரிக்காவில் மாடர்னா, ஃபைசர் / பயோஎண்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 38,02,41,903 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் 20,94,37,152 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 17,86,92,875 பேர் இதுவரை 2 டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.