நடிகர் சூரி இல்லத் திருமண விழாவில் 10 பவுன் நகைகளை திருடிய கொள்ளையன் கைது

தமிழ் சினிமாவில் முன்னனி நகைச்சுவை நடிகர் சூரி. கடந்த 9ஆம் தேதி அவரது சகோதரர் முத்துராமலிங்கத்தின் மகளின் திருமணம் மதுரையில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் பல்வேறு திரைப்பட பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணவிழாவில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, காணாமல் போன 10 சவரன் நகைகளை மீட்டு, விக்னேஷ் என்பாரை கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!