திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள 4.26 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அடர்வனக்காடுகள் உருவாக்க ( மியாவாக்கி முறையில் பூவரசு, யூக்கலிட்டஸ், கொய்யா, மருதம், நாவல், நீர் மருது, மலைவேம்பு, வேம்பு, உள்ளிட்ட 57 வகையான மரக்கன்றுகளை ஒரே இடத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மரக்கன்றுகள் நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
காட்டின் சூழலில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் காற்று மாசுபாடு குறைத்து, தூய்மையான காற்றை சுவாசிக்கவும். இயற்கை சூழலை மீட்டெடுக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணியாளர்கள. மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க உள்ளனர். இந்த அடர்வனக்காடுகள் உருவாக்கும் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார்,லால்குடி வருவாய் கோட்டாச்சியர் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.