வரும் ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை ஏலம் பணத்தை செலவிடக்கூடாது; வேண்டுமானால், மேட்ச் கார்டு மூலம் அவரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜாவாக கம்பீரமாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறை 7வது இடத்தை பிடித்து, மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. வழக்கம் போல் தோனியை சிலர் காட்டமாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா, சமூகவலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:
வரும் 2021ம் ஆண்டிற்கான ஏலத்தில், சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை விடுவித்துவிட வேண்டும். ஏனென்றால், ஒரு வீரரை ஏலம் எடுத்தால் 3 ஆண்டுகள் வைத்து விளையாட வேண்டும்.
தோனியால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு விளையாட முடியுமா என்று தெரியாது. அதற்காக தோனியை அணியில் வைக்காதீர்கள் எனச் சொல்லவில்லை. சிஎஸ்கே அணி நிர்வாகம் ரைட்டூ மேட்ச் கார்டு மூலம் தோனியை அணிக்குள் கொண்டுவரலாம். இதனால் அணிக்கு ரூ.15 கோடி மிச்சமாகும். இந்தப் பணத்தை வேறு இளம் வீரர்களை, நல்ல சர்வதேச வீரர்களைத் தேர்வு செய்யப் பயன்படுத்தலாம்.
இப்போது இருக்கும் சிஎஸ்கே அணியைக் கலைத்துவிட்டு, புதிய அணியை உருவாக்க விரும்பினால், டூப்பிளசிஸ், ராயுடுவுக்கு மட்டும் செலவிடலாம். ரெய்னா, ஹர்பஜன் சிங்கை மீண்டும் ஏலத்தில் எடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.