கொள்ளிடம் புதிய கதவணை பணி: ஆட்சியர் சிவராசு ஆய்வு

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் புதிய கதவணை பணியை மாவட்ட ஆட்சியர் சிவராசு, இன்று  நேரில் ஆய்வு செய்தார்.

காவிரி ஆற்றில் கடந்த ஆண்டு பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து,  கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் மேல்கட்டப்பட்டிருந்த அணையின் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 387.60 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்டுவதற்கான பணியினை கடந்த 19.02.2019 அன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நவீன தொழில்நுட்ப உதவியுடனும் 24 மாத காலத்திற்குள் இந்த அணையானது, எல் & டி நிறுவனத்தால் கட்டி முடிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தற்போது புதிய கதவணை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, புதிய கதவணையை  கட்டுமான பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், 45 தூண்கள் பூமியில் இருந்து பாலபகுதிக்கு அமைக்கும் பணி 60 சதவீதம் முடிவடைந்து விட்டது.  பிப்ரவரி 2021க்குள் புதிய கதவணை பணிகள் முடிவடையும் என்றார்.

Translate »
error: Content is protected !!