தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா: 2314 பேர் டிஸ்சார்ஜ்; 18 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1652 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 2314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று, 5வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1652 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 61 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2314 ஆகும். இதன் மூலம் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7.34 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இன்னும் கொரோனா பாதிப்பால் 15,085 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறைவது போலவே, தினசரி உயிரிழப்பும் கணிசமாக குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்தனர்; மொத்த பலி எண்ணிக்கை 11,513 ஆக உள்ளது. சென்னையில் இன்று 492 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது; சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.09 லட்சமாக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை பொருத்தவரை செங்கல்பட்டில் 112, கோவையில் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!