தென் ஆப்பிரிக்கா – இந்திய டெஸ்ட் தொடர்: மழையால் 2-ஆம் நாள் ஆட்டம் தாமதம்

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

‘பாக்சிங் டே’ எனப்படும் இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 90 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 122 ரன்களுடனும் (248 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 40 ரன்களுடனும் (81 பந்து, 8 பவுண்டரி) களத்தில் உள்ளனர். இன்றைய 2வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!