ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அலாவுதீன் மற்றும் ராதாகிருஷ்ணன், டாக்டர் ராமசுப்ரமணியம், பேராசிரியர் நளினிராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் புதிய பயிற்சி முயற்சிகளை இந்த புதிய காவல்துறை ஆணையம் அரசுக்கு பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவும் ஆணையம் பரிந்துரை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.