இன்று முதல்நாளான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசிமுதல்நாளான இன்று நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தம், பவளமாலை அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.

108 வைணவ ஸ்;தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்புவிழா நடப்பு ஆண்டு நேற்றிரவு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

பகல்பத்து முதல் நாளான இன்று காலை நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து நீள்முடி கிரீடம், ரத்தினஅபயகஸ்தரம், பவளமாலை, திருமார்பில் லட்சுமி பதக்கம், சூர்யபதக்கம் மற்றும் முத்து மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள்ளை சூடியபடி ஆழ்வார்கள் புடைசூழ புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் சென்றடைந்தார். அங்கு எழுந்தருளிய நம்பெருமாள் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுவார். பின்னர் மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

உற்சவத்தின்போது ஸ்ரீபாதம்தாங்கிகள் மற்றும் ஸ்ரீவைஷ்ணவகோஷ்டியினர் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
பகல்பத்து வைபவத்தின் 10ம் நாள் டிசம்பர் 24ம்தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார். அதன் பின்னர் இராப்பத்து வைபத்தின் முதல் நாளான 25ம்தேதியன்று அதிகாலை பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.

வைகுண்ட ஏகாதெசி திருவிழாவின் 21 நாட்களும் மூலவர் பெருமாளுக்கு முத்தங்கியுடன் சேவை சாதித்தருளுவார். நடப்பாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நம்பெருமாள் புறப்பாட்டின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது,அதேநேரம் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை காலை 8மணிமுதல் இரவு 8மணிவரை பக்தர்கள் தரிசித்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்துவருகின்றனர்.

மேலும் சுழற்சி முறையில் 450போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறநிலையத்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

 

Translate »
error: Content is protected !!