இந்திய அணி வரலாறு காணாத தோல்வி – 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

 அடிலெய்டு,

 இந்தியாஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டதுஆஸ்திரேலிய அணி 72.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. அதிகபட்சமாக டிம் பெய்ன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்

 இதனையடுத்து 53 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் (5), பும்ரா (0) ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி 36 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. முகமது சமிக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வெளியேறினார். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது

 ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் 5 விக்கெட்டும் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுஇதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

 

Translate »
error: Content is protected !!