‘‘சிர்ருல் இன்சான்’’ – மனித உடலில் அடங்கியுள்ள அரபி எழுத்துக்கள்!

மனிதனுடைய உருவம் முழுக்க அரபு எழுத்துக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதை ‘இல்முல் ஹர்ப்’ அதாவது அட்சரங்களின் ஞானம் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சூபி ஞாநிகள் அனைவரும் இக்கலையை தெரிந்தவர்கள்.

Arabic alphabets with english pronunciation

‘‘செய்ஹூல் அக்பர் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு’’ முதல் ‘‘தக்கலை பீர் முஹமது அப்பா வலியுல்லாஹ்’’ வரை இக்கலைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தவர்களே! இன்சானை குறிக்கும் இந்த ஹர்பில்….

‘அலிப்’ எனும் முதலாவது எழுத்து புருவத்தின் மத்தியாகும்.
‘பே’ எனும் இரண்டாம் எழுத்து வலப்புருவமாகும்.
‘தே’ எனும் மூன்றாம் எழுத்து இடப்புருவ மாகும்.
‘ஸே’ எனும் நான்காம் எழுத்து நெற்றியாகும்.
‘ஜீம்’ எனும் ஐந்தாம் எழுத்து தலையாகும்.
‘ஹா’ எனும் ஆறாம் எழுத்து வலப்பக்க தோள் ஆகும்.
‘ஹ்ஹாஆ’ எனும் ஏழாம் எழுத்து கண் ஆகும்.
‘தால்’ எனும் எட்டாவது எழுத்து வலது முழங்கால் ஆகும்.

‘த்தால்’ எனும் ஒன்பதாவது எழுத்து இடது முழங்காலாகும்.‘றா’ எனும் பத்தாவது எழுத்து வலது விலா ஆகும்.
‘ஷ’ எனும் பதினோராம் எழுத்து இடது விலாவாகும்.
‘ஸீன்’ எனும் பன்னிரண்டாவது எழுத்து வலது மார்பாகும்.
‘ஷீன்’ எனும் பதிமூன்றாவது எழுத்து இடது மார்பாகும்.
‘ஸாத்’ எனும் பதினான்காவது எழுத்து வலது செவியாகும்.
‘ழாத்’ எனும் பதினைந்தாவது எழுத்து இடது செவியாகும்.
‘தொ’ எனும் பதினாறாவது எழுத்து வலது கரண்டையாகும்.
‘ளொ’ எனும் பதினேழாவது எழுத்து இடது கரண்டையாகும்.
‘ஐன்’ எனும் பதினெட்டாவது எழுத்து வலது கரமாகும்.
‘கைன்’ எனும் பத்தொன்பதாவது எழுத்து இடது கரமாகும்.
‘ஃபா’ எனும் இருபதாவது எழுத்து வலது புறங்கையாகும்.
‘க்காப்’ எனும் இருபத்தொன்றாவது எழுத்து இடது புறங்கையாகும்.
‘காப்’ எனும் இருபத்திரண்டாவது எழுத்து முதுகெலும்பாகும்.
‘லாம்’ எனும் இருபத்தி மூன்றாம் எழுத்து தொடைப்பொருத்தாகும்.
‘மீம்’ எனும் இருபத்தி நான்காம் எழுத்து நெஞ்சு முதல் மூளை வரை ஆகும்.
‘நூன்’ எனும் இருபத்தைந்தாம் எழுத்து உயிரின் நிலையாகும்.
‘வாவ்’ எனும் இருபத்தாறாம் எழுத்து தொப்புளாகும்.
‘ஹ’ எனும் இருபத்தேழாம் எழுத்து இருதயமாகும்.
‘லாம் அலிப்’ எனும் இருபத்தெட்டாவது எழுத்து மூச்சாகும்.
‘அம்ஸ்’ எனும் இருபத்தொன்பதாவது எழுத்து விந்தாகும்.
‘யா’ எனும் முப்பதாவது எழுத்து ஆன்மாவாகும்.
இந்த முப்பது எழுத்துக்களின் இருப்பிடம்தாம் ‘சிர்ருல் இன்சான்’ ஆகும்.

– சூபி ஞானிகளின் ஆய்வு நுால்களில் இருந்து…

Translate »
error: Content is protected !!