500ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசிவசுப்ரமணியசுவாமி ஆலயம் – வழியெங்கும் பக்தர்கள் வழிபாடு

500ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசிவசுப்ரமணியசுவாமி ஆலயத்தில் ஆரூத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் வீதிஉலாவழியெங்கும் பக்தர்கள் வழிபாடு.

 சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும். சிறப்பான மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன்ஆலயங்களில் நடைபெறும் ஆரூத்ரா தரிசனமும் பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரிவழங்கும் வழிபாடாக உள்ளது.

இதனிடையே திருச்சி மாநகர் மேலப்புலிவார்ரோடு பகுதியில் உள்ள 500ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசிவசுப்ரமணியசுவாமி ஆலயத்தில் ஆரூத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் இன்று காலை சிறப்பு அலங்காரத்துடன் சிவகாமி அம்பாள், மற்றும் பரிகார மூர்த்திகளுடன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர், அதனைத் தொடர்ந்து நடராஜர் அஜபா நடன வைபவமும் பின்னர் நடராஜருக்கு மகாதீபாராதனையும் நடந்தது, நடராஜரை வழியெங்கும் திரளான பக்தர்கள் விரதமிருந்து வழிபட்டுச் சென்றனர்.

கொரோனா பரவல் காரணமாக பிரசித்திபெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாக விளங்கும் திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் நடராஜர் புறப்பாடு ரத்துசெய்யப்பட்டது

Translate »
error: Content is protected !!