எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் விழா; எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை அசோக் நகரில் நடந்த எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் பி.சத்தியா தலைமையில் தாரை தப்பட்டை மேளதாளம் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து பொதுக்கூட்டம் நடைபெற்ற புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரை வழிநெடுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

இரட்டை இலை மின் விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. விழாவுக்கு வந்த முதலமைச்சருக்கு தி.நகர் சத்தியா பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து அன்புடன் வரவேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரவு 7.10 மணி முதல் 8.15 மணி வரை சுமார் 1 மணி நேரம் பேசினார்.

அப்போது அண்ணா தி.மு.. ஆட்சியின் சாதனைகளை புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டார். ஸ்டாலின் பொய் பிரச்சாரத்திற்கு ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்த முதலமைச்சர், அவருக்கு சவால் விட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்த விழாவில் தி.நகர் தொகுதியில் இருந்து தி.மு.. இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் ரஜினி மன்றத்தை சேர்ந்த ஏராளமான பேர் முதலமைச்சர் முன்னிலையில் அண்ணா தி.மு..வில் சேர்ந்தார்கள்.

ஒரு குழந்தைக்கு ஜெயலட்சுமி என்று முதலமைச்சர் பெயர் சூட்டி உச்சி முகர்ந்தார். நிகழ்ச்சிக்கு தி.நகர் சத்தியா எம்.எல்.. தலைமை வகித்தார். தி.நகர் பகுதி செயலாளர் மு.உதயா, அண்ணா நகர் பகுதி செயலாளர் டி.தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்த்தன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார், சரஸ்வதி ரங்கசாமி, ஏழுமலை, மாநில இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், பகுதி செயலாளர்கள் செல்வகுமார், பி.எஸ்.எம்.ஜி.ஆர். வாசன், எம்.கே.சிவா மற்றும் வடபழனி நா.சந்திரன், அப்பு தீபக், ..அர்ஜூனன், கே.சந்திரசேகர், வி.சண்முகராஜ், ஆர்.வி. பாபு, தி.நகர் .எம்.வெங்கட், வி.ராமகிருஷ்ணன், பி.ராஜா, வி.சுரேஷ்குமார், ஆர். பத்மநாபன், வி.ரமேஷ், வி.சி.பெருமாள், தி.நகர் சங்கரன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் ஆர்.தமிழ் அரசு, ஆர்.கோகுல் ஆகியோர் நன்றி கூறினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

Translate »
error: Content is protected !!