இந்திய கிரிக்கெட் அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ஆற்காடு இளவரசர் சார்பில் பாராட்டு விழா

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர்தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டு, அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

அவருக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மகாலில் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஒயிட் லீஃப் டேலண்ட் என்னும் அமைப்பு நடத்திய விழாவில் வாஷிங்டன் சுந்தருக்கு ஆற்காடு இளவரசர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். திவான் நவாப் முகமது ஆசிப் அலி, பஹாத், விழா ஏற்பாட்டாளர்கள் உள்பட கிரிக்கெட் ஆர்வலர்களும் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

இந்திய நாட்டின் கிரிக்கெட் அணியின் 301வது வீரர் வாஷிங்டன் சுந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர் மகால் வளாகத்தில் சிறுவனாக இருந்து விளையாடிய பால பருவத்தில் இருந்தே சுந்தரை நன்கு அறிந்தவர்கள் நாங்கள். இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு வீரராக அவர் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்கும், பெருமைக்குரிய விஷயம்.

கடின உழைப்பு, முழு ஆர்வம், முழு ஈடுபாடு, விளையாட்டில் அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு ஆகிய ஐந்து அம்சங்களும் வாஷிங்டன் சுந்தரை இன்றைக்கு முதல் நிலையக்கு உயர்த்தி இருக்கிறது. உலகளவில் ஒரு அங்கீகாரம் பெறவும் அவரை உயர்த்தி இருக்கிறது என்று தன் வாழ்த்துரையில் ஆற்காடு இளவரசர் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

 

Translate »
error: Content is protected !!