செய்தித்துளிகள் …

# ஸ்ரீபெரும்புதூர் : ஆர்டிஓ அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 3.84 லட்சத்தை பறிமுதல் செய்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் நடவடிக்கை

# மதுரையில் நான்கு வழி சாலைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு பணம் வழங்குவதில் முறைகேடு செய்ததாக வட்டாட்சியர் அலுவலக ஊழியர் சாந்தி மீது வழக்கு பதிவு- சாந்தி மற்றும் முறைகேட்டிற்கு உதவியதாக அவரது சகோதரரிடம் போலீசார் விசாரணை

# திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சி பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் ஊராட்சி செயலர் பங்கேற்கவில்லை

# தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பதிலாக அவர்களது சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் பொருள்களை வாங்கிச் செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

# திருவள்ளூர் : புதுச்சத்திரம் பகுதியில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் 200 பேர் மீது வெள்ளமேடு போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

# ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் தலைமையிலான கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

# புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரத்தில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

# மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து அறந்தாங்கி அருகே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

# திருப்பூரில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் போராட்டம்- காங்கயம் சாலையில் உள்ள சிகிச்சை மையத்தில் முறையாக உணவு வழங்கப் படுவதில்லை என புகார்- 85 கொரானா நோயாளிகள் உணவு உண்ண மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

# ராகுல்காந்தியை கைது செய்த பாஜக அரசை கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

# திருப்பத்தூர் : விநாயகம் என்பவரின் வீட்டில் பூட்டு & பீரோவை உடைத்து 40 சவரன் நகை , 80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை – போலீசார் விசாரணை

# மதுரை : கிசான் முறைகேடு – 62 பேர் பணியிட மாற்றம் மாவட்ட நிர்வாகம் அதிரடி

# கொரானா காலத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது-திரையரங்குகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும்-கிராம சபை கூட்ட விவகாரத்தில் ஸ்டாலின் வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்-அமைச்சர் கடம்பூர் ராஜு

# சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 176 உயர்வு

# கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் தரமற்ற மாஸ்க் நம்பி அணிவோர்க்கு கொரோனா தொற்று உறுதி-மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்

# சிதம்பரத்தில் இருந்து புவனகிரி செல்லும் பகுதியில் அமைந்துள்ள பாசிப் பத்தான் ஓடையில் துணி துவைத்து குளிக்கச் சென்ற அஞ்சம்மாள் வயது 15 என்பவர் தண்ணீரில் மூழ்கி அடித்துச் சென்றதால் பரபரப்பு சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினரும் சிதம்பரம் தாலுகா போலீசாரும் தண்ணீரில் மூழ்கிய அஞ்சம்மாளை தேடி வருகின்றனர்

# பக்தி காரணமாகவே துணைமுதல்வர் கோவிலுக்கு சென்றார் , அதில் தவறு ஏதும் இல்லை-அக்டோபர் 7ல் அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காவிட்டால் அக்டோபர் 8-இல் என்னிடம் வந்து கேளுங்கள்- மசோதா விவகாரத்தில் செய்வதையெல்லாம் செய்துவிட்டு தற்போது திமுக வேஷம் போடுகிறது- வேளாண் மசோதாக்கள் தொடர்பாக திமுகவின் வேஷத்தை மக்கள் நம்பமாட்டார்கள்-அமைச்சர் ஜெயக்குமார்

# முதல்வர் வேட்பாளர் தேர்வுக்காக எம்எல்ஏக்களை சென்னை அழைக்கவில்லை-பேரவை தேர்தல் பணிக்காக எம்எல்ஏக்கள் சென்னைக்கு வர ஆணையிட்டு இருக்கலாம்-அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

# திமுக நடத்துவது போட்டி கிராமசபை கூட்டம் இல்லை , மக்களுக்கான குறைகேட்கும் கூட்டம்- ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் என்பது ஜனநாயகத்தை அடியோடு பெயர்த்து எடுக்கும் திட்டம்-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

# பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் முன்பு உள்ள தனியார் விடுதியில் தீ விபத்து , தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

Translate »
error: Content is protected !!