தெற்கு சூடானில் அடையாளம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் அடையாளம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணமான ஜாங்லியில் உள்ள ஃபங்காக்கில் மர்ம நோயின் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்திய கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து இந்த நிபுணர்கள் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்திபேதி ஏற்பட்டிருக்கலாம் என்று கருதிய நிலையில் அதற்கு எதிர்மறையான முடிவுகளை வெளிப்படுத்தியதால் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!