ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 71,21,516 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 796 பேர் இறந்தனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 1.91 லட்சத்தைத் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 17,888 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 63,75,160 பேர் குணமடைந்துள்ளனர்.