இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5,488 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,488 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 கொரோனாவின் 3-வது அலை சுழன்று அடிக்கும் நிலையில், மறுபக்கம் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதன்படி நாட்டில் அதிகபட்சமாக

மராட்டியத்தில்  1,347,

ராஜஸ்தானில் 792,

டெல்லி – 549,

கேரளாவில் 486,

கர்நாடகாவில் 479,

மேற்கு வங்கத்தில் 294,

மத்தியப் பிரதேசத்தில் 275,

தெலுங்கானாவில் 260,

குஜராத்தில் 236,

தமிழ்நாட்டில் 185,

ஒடிசாவில் 169,

ஹரியானாவில் 162 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,367 பேரில் இதுவரை 734 பேர் குணமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 792 பேரில் இதுவரை 510 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 549 பேரில் இதுவரை 57 பேர் குணமடைந்துள்ளனர்

கேரளாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 486 பேரில் இதுவரை 140 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!