குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக முக்கிய 8 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவை குஜராத் அரசு அறிவித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 14 பேர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 165 ஆக உள்ளது.