மீண்டும் நோவக் ஜோகோவிச்சின் விசா ரத்து..!

கொரோனா தடுப்பூசி செலுத்ததால் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வந்த ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் விசா மறுக்கப்பட்டு தஞ்சமடைவோருக்கான விடுதியில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் அங்கிருந்து வெளியேறி வெளியேறி டென்னிஸ் பயிற்சியை தொடங்கினார்.

இந்நிலையில், அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் ஜோகோவிச்சால், தொற்று பரவ வாய்ப்புள்ளதால், பொது நலன் கருதி அவரது விசாவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். டென்னிஸ் வரலாற்றில் முன்பை விட அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனை படைக்க காத்திருந்த ஜோகோவிச்சிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜோகோவிச் மீண்டும் நீதி மன்றத்தை நாட உள்ளார்.

Translate »
error: Content is protected !!