புதுச்சேரியில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்போர் மட்டுமே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதி தரப்படும் என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.புதுவையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டுக் கொண்டாட்டம் பெரியளவில் நடைபெறவில்லை. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், புதுவையில் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுவைக்கு வரும் பயணிகளுக்கு சுற்றுலா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் அரசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் லட்சுமி நாராயணன், கொரோனா வழிகாட்டு விதிமுறைப்படி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றார் வரும் டிசம்பர் 31- ம் தேதி இரவு கடற்கரைச் சாலையில் சிறப்பு நிகழ்வுகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கும் எனவும் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த திட்டமிடும் ஹோட்டல்கள், நிறுவனங்கள் வரும் டிசம்பர் 23-ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, சுற்றுலாத்துறைக்கும் தெரிவிக்கவேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.