ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,05,983 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 1,075 பேர் இறந்தனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 2.29 லட்சத்தைத் கடந்துள்ளது. இதுவரை 71,43,137 பேர் குணமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ரஷ்ய அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் 28 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மாஸ்கோவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளதாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேற 4 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.