யூடியூப்பில் முதலமைச்சர் குறித்து சாட்டை துரைமுருகன் அவதூறாகப் பேசியதை, எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யாத காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? அவர்களின் வழக்குகள் எவ்வாறு கையாளப்படும்? என்றும் நீதிபதி கேட்டார். போதிய ஆதாரம் இல்லாததால் அரசின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அப்போது, அரசுத் தரப்பில் ஒரு வார கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.