தமிழ் திரையுலகில் ‘உலகநாயகன்’ என்று அழைக்கப்படும் பிரபலமான நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஸ்ருதிஹாசனின் ரசிகர் ஒருவர் அவரிடம் உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன் 100 என்று அனுப்பி கிண்டலாக பதிலளித்துள்ளார்.