தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 23 நாட்களாக நடந்து வந்த நிதிநிலை அறிக்கை மீதான மானியக் கோரிக்கை-யில் 30 க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.