தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை வந்த 4 சீசனும் மக்களிடையே பெரும் அளவில் ரீச் ஆனது. விரைவில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளது. அதற்கான ப்ரொமோ வெளியிடப்பட்டு பெரும் அளவில் அனைவரையும் ஈர்த்தது.
மேலும் சீசன் 5யில் கலந்துகொள்ள போகும் நபர்கள் குறித்த ஆர்வம் அனைவர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கலந்து கொள்ள போகும் நபர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5யில் பிரபல தொகுப்பாளினி “பிரியங்கா தேஷ்பாண்டே” கலந்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.