கொரோனா தடுப்பூசி இன்று முதல் 24 மணிநேரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செலுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.