தேனி மாவட்டம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை துவங்கியுள்ளைதை அடுத்து ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக நாள்தோறும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் குமுளி மலைச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனியில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கட்டப்பணை, எரிமேலி மற்றும் பம்பை வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.