வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய அணியில் இருந்து விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பின்னங்காலில் காயமடைந்தார்.

2-வது இன்னிங்சில் 3.3 ஓவர் மட்டுமே பந்து வீசிய நிலையில் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறிய உமேஷ் யாதவுக்கு தசைநாரில் கிழிவு ஏற்பட்டு இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய தொடரில் விளையாடமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயத்தால் விலகிய நிலையில் உமேஷ் யாதவின் காயம் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக கூடுதலாக தற்போது வலைபயிற்சி பந்து வீச்சாளராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

 

Translate »
error: Content is protected !!