ஐ.பி.எல். தொடரில் விளையாட விராட் கோலிக்கு தடை விதிப்பா?

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களுரு அணிக்காக விளையாடி வரும் அதன் கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ் இருவருக்கும் தடை விதிக்க வேண்டும் என்று, பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணியை போல் மிக மோசமாக இல்லாமல், பெங்களூரு அணி பலம்வாய்ந்த அணியாக சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது. கேப்டன் விராட் கோலி மற்றும் டி-வில்லியர்ஸ், இதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டி தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்டோர் கலந்துரையாடினர். அப்போது பெங்களூரு அணியை புகழ்ந்து தள்ளிய கே.எல்.ராகுல், விராட் கோலி மற்றும் டி-வில்லியர்ஸை, ஐ.பி.எல் தொடரில் இருந்து தடை செய்ய வேண்டும் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.

அதாவது, சிறப்பாக விளையாடி வரும் அவர்கள் இருவரும் அணியில் இருந்தால், தங்களது வெற்றியை அது பாதிக்கும் என்ற பொருளில், ராகுல் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், 5000 ரன்கள் அடித்த பின் இவர்களை இருவரையும் வெளியேற்ற வேண்டும். அடுத்த வீரர்களுக்கு அவர்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டது, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Translate »
error: Content is protected !!