கொட்டித்தீர்க்கப்போகுது கனமழை! 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவின் ஐதராபாத்தில் வரலாறு காணாத மழை பெய்து, அங்கு இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.

 

இதேபோல், கர்நாடகாவிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக வட கர்நாடக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பசவசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 491.85 அடியாக இருந்தது. மேலும், கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பாகல்கோட்டை, யாதகிரி மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

விஜயாப்புரா மாவட்டத்தில் ஓடும் மூர்த்தி, டோனி நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தில் மஸ்கி பகுதியில் உள்ள அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மஸ்கி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இச்சூழலில், கர்நாடகாவின் வடக்கு பகுதியில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பீதர், கலபுரகி, ராய்ச்சூர், யாதகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!