கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்! கிலோ ரூ.100ஐ தொட்டது

பல மாநிலங்களில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்து, வெங்காயம் விலை கிடுகிடுவென்று அதிகரித்து வருகிறது.

ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில்  தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, வாகனப்போக்குவரத்து முடங்கியுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் உள்ளிட்டவற்றின் வரத்து, தமிழகத்திற்கு குறைந்துள்ளது. இதனால், பல சந்தைகளில் வெங்காயம் விலை கிடுகிடுவென்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

திருச்சி சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்ததால், மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், சில்லறை விலையில் கடைகளில் சாம்பார் வெங்காயம் கிலோ 90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அன்றாட சமையலில் அத்தியாவசிய தேவையான வெங்காயத்தின் விலை உயர்வு, நடுத்தர, ஏழை குடும்பங்களை கவலையடையச் செய்துள்ளது.

Translate »
error: Content is protected !!