சேலம் மாவட்டத்தில் 7,100 பயனாளிகளுக்கு ரூ.56.48 கோடி தாலிக்கு தங்கம்.. திருமண நிதி உதவி – முதலமைச்சர் எடப்பாடி வழங்கினார்

சென்னை,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 7,100 பயனாளிகளுக்கு ரூ.56.48 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விதமாக 35 பயனாளிகளுக்கு இன்று வழங்கி தொடங்கி வைத்தார்.

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்திற்கு 2020–2021–ம் நிதியாண்டிற்கு பட்டம் பயின்ற 4,737 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம்வீதம் ரூ.23 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம்திருமண நிதியுதவியும்,

10–ம் வகுப்பு பயின்ற 2 ஆயிரத்து 363 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம்வீதம் ரூ.5 கோடியே 90 லட்சத்து 75 ஆயிரம்திருமண நிதியுதவியும், 10–ம் வகுப்பு மற்றும் பட்டம், பட்டயம் பயின்ற ஏழைப் பெண்களுக்கு தலா ஒரு பவுன் தங்கம் வீதம் ரூ.26 கோடியே 88 லட்சத்து 96 ஆயிரத்து 538 – மதிப்பீட்டிலான 7,100 பவுன் (37,872 கிராம்) தங்கமும் வரப்பெற்றுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 7,100 பயனாளிகளுக்கு ரூ.56.48 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விதமாக 35 பயனாளிகளுக்கு இன்று (16–ந் தேதி) வழங்கி தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் 2011-–2012 முதல் 2017–-2018 வரை 10–ம் வகுப்பு மற்றும் பட்டம், பட்டயம் பயின்ற 38,575 ஏழைப் பெண்களுக்கு ரூ.136 கோடியே 3 லட்சம் திருமண நிதியுதவியும், திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வீதம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 300 கிராம் தங்கமும், 2017-–2018 முதல் 2019–-2020 வரை 10ம் வகுப்பு மற்றும் பட்டம், பட்டயம் பயின்ற 16,400 ஏழைப் பெண்களுக்கு ரூ.62 கோடியே 28 லட்சம்திருமண நிதியுதவியும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வீதம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 200 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராமன், கூடுதல் இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) நா.அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. திவாகர், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி. வெங்கடாசலம், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பி.மனோன்மணி, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் ரெ.கார்த்திகா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!