தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய குடிநீர் திட்டத்திற்கு பேரூராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு

பேரூராட்சிக்கு 9 கோடியே 54 லட்சத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய குடிநீர் திட்டத்திற்கு பேரூராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு.

 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  உள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கும் புதிய குடிநீர் திட்டத்தை மூன்று தினங்களுக்கு முன்பாக காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டமானது ஏற்கனே செயல்பாட்டில் உள்ள  கிணற்றில் இருந்து குடிநீர் வழங்கும்  திட்டமாக  புதிய குடிநீர் திட்டம் உள்ளதாக கூறி தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள முத்தையா கோவில்களில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து

தமிழக அரசு 9 கோடியே 54  லட்சத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.  மேலும் அந்த கூட்டத்தில் புதிய குடிநீர் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு சோத்துப்பாறை அணை யில் இருந்து பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட புதிய குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  பழைய முறைப்படி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக  பேரூராட்சி பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

 

 

Translate »
error: Content is protected !!