முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறைக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 197 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், பள்ளிக் கல்வி ஆணையர் என்.வெங்கடேஷ், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.