நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 27–ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை

நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 27–ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் 1744 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, நம்பியாறு நீர்தேக்கத்தின் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதானக் கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 27.1.2021 முதல் 31.3.2021 வரை, நாள்தோறும் வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீரை திறந்துவிட நான்ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் ராதாபுரம் வட்டங்களில் 1744.55 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

Translate »
error: Content is protected !!