நீட் தேர்வு தோல்வி அச்சம்.. மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் “நீட்” அச்சத்தால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலைகள் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டும் “நீட்” அச்சத்தால் மாணவர், மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் கூழையூரை சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி ஆகியோர் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நீட் தோல்வி பயத்தால் மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். தான் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவமோ என மன உள்ளச்சலில் இருந்த அந்த மாணவி இன்று காலை வீட்டில் தனியாக இருக்கும் போது புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மனரீதியிலான கவுன்சிலிங் ஆலோசனைக்கு ‘104’ ஐ தொடர்பு கொள்ளலாம்.

Translate »
error: Content is protected !!