மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். தலைவி படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் கடந்த 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ‘தலைவி’ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் விஜய்யை அழைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதை உருவாக்கியதற்கு படக்குழுவை பாராட்டியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.