தமிழ்நாட்டில் இன்று மேலும் 4,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,055 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,22,458 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒரேநாளில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 10,472 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,74,802 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 41,872 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று ஒருநாளில் 1,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டங்களில் 3,262 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னை – 1,148, செங்கல்பட்டு – 255, கோவை – 395, சேலம் – 263, நாமக்கல் – 148, கடலூர் – 120, காஞ்சிபுரம் – 112,திருவள்ளூர் – 192, திருப்பூர் -146, வேலூரில் 114 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.