தமிழகத்தில் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியில் இருந்தார். அவருக்கு சமீபத்தில் பஞ்சாப் ஆளுநர் பதவியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவர் பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில்,
கேரளாவில் சிறந்த காவல்துறை தலைமை அதிகாரியாகவும், நாகலாந்து மாநில ஆளுநராகவும் சிறப்பாக பணியாற்றி தற்பொழுது தமிழ்நாட்டின் புதிய கவர்னராக பொறுப்பேற்க உள்ள பீகாரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில்,
நாகலாந்து அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதை அதிமுக சார்பில் வரவேற்கிறேன். அவரது நியமனம் நிச்சயமாக தமிழகத்தின் வளர்ச்சியை பெரிதும் உயர்த்தும். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.