ஆப்கானிஸ்தானில் புதிய தலிபான் அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ப போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.
மாஸ்கோ,
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால போர் கடந்த மாதம் 15 ம் தேதி முடிவடைந்தது. ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இந்நிலையில், அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதலின் ஆண்டுவிழாவான செப்டம்பர் 11 ஆம் தேதி புதிய தாலிபான் அரசு பதவியேற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று ரஷ்யா கூறியுள்ளது.