ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம், நவம்பர் 3ம் தேதி நடக்கிறது. அப்போது டிசம்பர் மாத மத்தியில், ரெப்போ ரேட்டை 0.5% முதல் 0.75% வரை உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக, 0.5% உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த ரெப்போ ரேட் உயர்வால்,…
Year: 2022
உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63.55 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 61.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 65.94 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1.4 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உகாண்டாவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கிஷோரோ நகரில் வசித்து வந்த இந்தியர் குந்தாஜ் படேல் (வயது 24). அங்கு இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். இந்நிலையில் அக்டோபர் 27 அன்று, எலியோடா குமிசாமு என்கிற காவலர் குந்தாஜினை சரமாரியாக…
டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை இன்று (நவம்பர் 1), ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில் வெளியிடுகிறது. இதற்கு டிஜிட்டல் ரூபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.…
க்ரோம் ஓஎஸ் 107இல் அறிமுகமான புதிய அப்டேட்
கூகுள் நிறுவனம் அதன் க்ரோம் ஓஎஸ் 107 இல், ‘Save Desk for Later’ எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பக்கத்தை, சிறிது நேரம் கழித்து மீண்டும் பயன்படுத்த விரும்பினால், விட்ட இடத்தில் இருந்தே…
மெஹுல் சோக்ஷிக்கு ரூ.5 கோடி அபராதம்
இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய கோடீஸ்வரர்களுள் ஒருவரான மெஹுல் சோக்ஷிக்கு, செபி அமைப்பு ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும் அவருடைய நிறுவன பங்குகளை பங்குச் சந்தையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது. இதற்கு முன்பும்,…
எலன் மஸ்க் ஆதரிக்கும் கிரிப்டோகரன்சியின் மதிப்பு உயர்வு: நிபுணர்கள் எச்சரிக்கை
எலன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அவர் ஆதரித்து வந்த கிரிப்டோகரன்சியான, டோஜ் காயினின் மதிப்பு அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். “ட்விட்டருடன் உள்ள தொடர்பு காரணமாக மதிப்பு அதிகரிக்கிறது. இதனால், அதன்…
எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்: சசிகலா
குஜராத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மோர்பி தொங்குபாலம் அறுந்து விழுந்த கோர விபத்தில் இதுவரை 140க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும்,150க்கு மேற்பட்டவர்கள் இன்னும் மீட்கப்பட வேண்டியி ருப்பதாகவும் வரும் செய்திகள்ந மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இந்த விபத்தின் போது…
கந்த சஷ்டி நிறைவு விழாவாக திருக்கல்யாணம்
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 25ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (30ம் தேதி) நடைபெற்றது. இந்நிலையில் கந்தசஷ்டி நிறைவு விழாவான இன்று (31ம் தேதி) காலையில் பழனி…
“காவல்துறை நண்பர்களுக்கு நன்றி” – அண்ணாமலை
“கோவையில் வேறு அசம்பாவிதம் நடக்காமல், துணிவாகச் செயல்பட்டுள்ள காவல்துறை நண்பர்களுக்கு நன்றி. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று மதத்தை வைத்து சதிகாரர்கள், பிளவுபடுத்த முயன்றாலும்கூட கோவை மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எந்த மதச்சாயத்தையும் நாங்கள் பூசவில்லை” என, தமிழ்நாடு…