சந்திர கிரகணம் இன்று (நவம்பர் 8) மதியம் 2.10க்கு தொடங்கி மாலை 6.10 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய கோயில்களின் நடை அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பிரசித்திப்பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தின்போதும் கோயில் நடை…
Category: slider – 1
திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பி – ஓ. பன்னீர்செல்வம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையிலுள்ளது. இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள்தான். ஆனால், நாங்கள் பயணிக்கும் பாதை வேறு. எங்களை…
16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
‘வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டில் வரும் 10ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, நாகை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது’ என,…
10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
2022-23ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (7ம் தேதி) வெளியிட்டார். அதன்படி 10ம் வகுப்பு தேர்வு 2023 மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரையும், 11ம் வகுப்பு தேர்வு 2023 மார்ச்…
10% இடஒதுக்கீடு: அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்: முதல்வர்
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், “பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு. சட்ட வல்லுநர்களோடு…
ஜெர்மனி நிறுவனத்தை மொத்தமாக வாங்கிய முகேஷ் அம்பானி
இந்திய சந்தையில் ஹோல்சேல் வர்த்தகத்தைச் செய்து வந்த ஜெர்மனியின் மெட்ரோ ஏஜி நிறுவனம் போட்டியை சமாளிக்க முடியாமல் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. இதனால் மெட்ரோ ஏஜி நிறுவனத்தை வாங்க பெரும் நிறுவனங்கள் போட்டி போட்டன. இந்நிலையில், முகேஷ் அம்பானியின்…
10% இடஒதுக்கீடு நூற்றாண்டின் அநீதி: பிரபல பத்திரிகையாளர்
‘10% இடஒதுக்கீடு என்பது நூற்றாண்டு கால சமூகநீதிப் போராட்டத்தின் வேரில் ஊற்றப்பட்ட வெந்நீர். இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி. இந்தத் தீர்ப்பு திருத்தி எழுதப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு அரசியல் சாசன சட்டப்படி செல்லத்தக்கதே என்பதும் விந்தையான வேடிக்கை. வருங்காலம்…
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை – 5/11/2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,46,59,44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 5 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,484 ஆக…
கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்வான அமைச்சரின் மகன்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகத் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசோக் சிகாமணியை எதிர்த்துப் போட்டியிடத் தாக்கல் செய்த மனுவைப் பிரபு திரும்பப்பெற்றார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகப் பழனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நிரம்பி வழியும் மணிமுக்தா அணை; உபரிநீர் வெளியேற்றம்
தொடர் மழை எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், மணிமுக்தா அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் 700 கனஅடி தண்ணீர் அப்படியே மணிமுக்தா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மணிமுக்தா ஆற்றின் கரையோர மக்களுக்கு…